ஆப்பிளின் அதிரடி தீர்மானம்: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

Report Print Givitharan Givitharan in கஜெட்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

ஆப்பிள் நிறுவனம் வடிவமைக்கும் பல்வேறு இலத்திரனியல் சாதனங்களுள் AirPort Router எனும் சாதனமும் ஒன்றாகும்.

இச் சாதனமானது Wi-Fi தொழில்நுட்பத்தின் ஊடாக அனைத்து திசைகளிலும் மொபைல் சாதனங்களை இணைய வலையமைப்பில் இணைக்கும் ஆற்றலைக் கொண்டது.

மேலும் இதன் ஊடாக வெளிவிடப்படும் சமிக்ஞையானது துல்லியமாகவும், விரைவானதாகவும் இருப்பதுடன் வலிமை மிகுந்ததாகவும் காணப்படும்.

தற்போது கிடைத்த தகவல்களின்படி இச் சாதனத்தை வடிவமைக்கும் பணியை ஆப்பிள் நிறுவனம் இடை நிறுத்தவுள்ளதாக தெரிகின்றது.

இதற்கு பிரதான காரணமாக இச் சாதத்தினை வடிவமைத்து வந்த ஆப்பிள் நிறுவனத்தின் குழுவின் உறுப்பினர்கள் கடந்த 12 மாத காலமாக வேறு உற்பத்திகளை அறிமுகம் செய்வதற்காக பிரிந்து சென்றுகொண்டிருக்கின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் இன்னும் சில காலத்தில் AirPort Router சாதன விற்பனையும் நிறுத்தப்பட்டுவிடும் என தெரிகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முடிவாது அதன் வாடிக்கையாளர்களுக்கு பெரும் இழப்பாகத்தான் இருக்கப்போகின்றது.

மேலும் கஜெட்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments