அறிமுகமாகின்றது உலகின் முதலாவது ஸ்மார்ட் ஜக்கெட்!

Report Print Givitharan Givitharan in கஜெட்ஸ்
0Shares
0Shares
lankasri.com
advertisement

இன்றைய நவீன உலகினை கட்டியாளும் தொழில்நுட்பமாக ஸ்மார்ட் தொழில்நுட்பம் காணப்படுகின்றது.

அனேகமான இலத்திரனியல் சாதனங்களில் இத் தொழில்நுட்பம் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆடைகளிலும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

advertisement

இதன்படி கூகுள் மற்றும் லெவி நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் ஸமார்ட் ஜக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆடைகளில் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தினை உட்புகுத்துவது குறித்து 2015ம் ஆண்டு கூகுள் நிறுவனம் அறிவிப்பு ஒன்றினை விடுத்திருந்தது.

இந்த அறிவிப்பின் அடிப்படையிலேயே தற்போது குறித்த ஜக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்து முடிவதுடன், பாடல்களைக் கேட்டு மகிழவும் முடியும்.

மேலும் GPS தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளதுடன், தொலைபேசி அழைப்புக்கள், குறுஞ்செய்திகள் என்பன கிடைக்கப்பெறும்போது அதிர்வினை ஏற்படுத்தி தெரிவிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

எனினும் இச் செயற்பாடுகளுக்கு ப்ளூடூத்தின் உதவியுடன் ஸ்மார்ட் கைப்பேசி இணைக்கப்பட்டிருத்தல் அவசியமாகும்.

இதன் விலையானது 350 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

மேலும் கஜெட்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments