வாட் ஏ டெக்னாலஜி...அசத்தலான பயனுள்ள கஜெட்ஸ்

Report Print Meenakshi in கஜெட்ஸ்
0Shares
0Shares
lankasri.com

தொழில்நுட்பங்கள் பெருகி வரும் இக்காலத்தில் ஒவ்வொரு நாளும் புதிதாக கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

இவை நமது வேலைகளை சுலபமாக்குவதுடன் பயனுள்ளதாகவும் இருக்கிறது.

Pup Scanner

Pup Scanner ஆனது எளிதாக Scan செய்வதற்கு உதவுகிறது. அளவில் மிக சிறியதாகவும் உள்ளதால் எங்கு வேண்டுமானாலும் இதனை எடுத்து செல்லலாம். Scan செய்தவற்றினை Pdf file களாக மாற்றிவிடுதால் பகிர்வதும் எளிது.

The Remarkable

பார்ப்பதற்கு Tablet போல் இருக்கும் இதில் Pdf file-களை படிக்கலாம். நாம் புத்தகங்களில் குறிப்பெடுப்பதை போல் இதில் நாம் குறிப்பெடுத்து கொள்ளலாம்.

படிப்பதற்கும், எழுதுவதற்கும் வரைவதற்கும் கூட உதவுகிறது. இதில் Battery-ஆனது நீண்ட நேரத்திற்கு பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Mother Box

Wireless Charger போன்று அமைக்கப்பட்டிருக்கும் இதனை மொபைல் போனுடன் இணைக்க தேவையில்லை.

இது ஆற்றல் கற்றையினை வெளியிட்டு கொண்டே இருப்பதால், மொபைல் போனுடன் இணைக்கப்பட்டு Charge இருந்து கொண்டே இருக்கும்.

Ever last

Ever last என்பது ஒரு நோட்டு புத்தகம் ஆகும். நீரில் போன்ற எதனாலும் பாதிக்கப்படாது.

குறிப்புகளை எடுத்த பின்னர் Scan செய்து பதிந்து கொண்டு இதனை மீண்டும் அழித்து விட்டு புதிதாக குறிப்புகளை எடுத்து கொள்ளலாம்.

Fancy

மொபைல் போனுடன் இதனை இணைத்து வீடியோ, போட்டோக்களை எடுப்பதினால் தெளிவாக எடுக்க முடியும். போட்டோ கிராபர்களுக்கு இது பயனுள்ள தொழில்நுட்பமாகும்.

Hour of Code

Code.Org என்னும் நிறுவனம் தயாரித்த இந்த தொழில்நுட்பமானது எளிதான முறையில் விளையாட்டுகள் மற்றும் வினாடிவினா ஆகியவற்றினை கம்ப்யூட்டரில் வடிவமைப்பதற்கு பயன்படும் Coding-ன் அடிப்படையினை குழந்தைகள் வேடிக்கையான முறையில் எளிதாக கற்று கொள்வதற்கும் எழுதுவதற்கும் உதவுகிறது.

இதனை பயன்படுத்தி குழந்தைகள் புதிதாக விளையாட்டுகளை கூட உருவாக்க இயலும்.

Muzo

அதிக இரைச்சலில் இருந்து தப்பிக்க இந்த சாதனமானது பயன்படுகிறது, எங்கு வேண்டுமானாலும் பொருத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதிக இரைச்சல் உள்ள இடங்களில் இதனை பொருத்திவிட்டால் அந்த இரைச்சலினை கட்டுப்படுத்தி அமைதியான சூழலை நம்மை சுற்றி உருவாக்கும்.

மேலும் கஜெட்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments