எளிதாக இனி Scan செய்யலாம்: Wireless Scan Mouse அறிமுகம்

Report Print Meenakshi in கஜெட்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பெரும்பான்மையான இடத்தை அடைத்து கொண்டிருக்கும் தொழில்நுட்ப சாதனங்களுக்கு பதிலாக நாம் எளிதில் பயன்படுத்துமாறு அதிக இடத்தை அடைக்காத வண்ணம் தற்போது தொழில்நுட்ப கருவிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

அந்த வரிசையில் உருவாக்கப்பட்டிருக்கும் தொழில்நுட்பம் Wireless Scan Mouse. இதன் மூலம் நாம் எளிதாக Scan செய்ய இயலும். இதை நாம் பயன்படுத்துவதும் மற்ற இடங்களுக்கு எடுத்து செல்வதும் மிக எளிது.

பயன்படுத்தும் முறை

இந்த Wireless Mouse-ஐ நமது கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் அனைத்துடனும் BlueTooth மூலம் இணைத்து கொள்ள இயலும்.

சாதாரணமாக நாம் Mouse-ஐ உபயோகிப்பது போன்று நாம் Scan செய்யவேண்டிய புத்தகம் அல்லது நமது குறிப்புகள் மீது தேய்க்க வேண்டும்.

பின் Scan செய்த அந்த பக்கத்தினை நமது மொபைல் அல்லது லேப்டாப், கம்ப்யூட்டரில் பதிந்து கொள்ள இயலும்.

இதற்கு சார்ஜ் போடுவதற்கு பதிலாக நாம் பேட்டரியினை மாற்றி கொள்ளலாம்.

மேலும் கஜெட்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments