குறுநடை போடும் குழந்தைகளை பாதுகாக்க புதிய போன் பயன்பாடு

Report Print Malini Malini in கஜெட்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

கல்கரியை சேர்ந்த ஒரு சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் இரவில் அவர்களது படுக்கை அறையை விட்டு வெளியேறி அலைந்து திரிவது குறித்து கவலை கொண்டிருந்தனர்.

இதற்கு ஒரு வழி கண்டுபிடிக்கும் முயற்சியாக அவர்கள் ஸ்மாட் போன் தீர்வொன்றை கண்டு பிடித்தனர்.

கிறிஸ்ரா ரிறி மற்றும் லிசா கருசோ ஆகிய இருவரும் பற்றறியில் இயங்கும் முன் மாதிரியான கருவியை உருவாக்கி அதனை குழந்தைகளின் படுக்கை அறை கதவின் பிடியில் தொங்கவிட்டு தங்களது ஸ்மாட் போனில் ஒரு அலாரத்தை இணைத்துள்ளனர்.

குறிப்பிட்ட சாதனம் எப்பொழுதெல்லாம் தள்ளுப் படுகின்றதோ அப்பொழுது எல்லாம் அலாரம் அலறும்.

குழந்தைகள் இரவில் கதவுகளை திறக்க முயலும் போது கைபிடியில் தொங்கும் சாதனம் தள்ளுப்பட அலாரம் அலறத்தொடங்கும்.

ஒரு நாள் காலையில் எழுந்த போது தனது இரண்டு வயது மகனின் கட்டிலில் தெளிப்பான் [sprinkler] ஒன்று கிடக்க கண்டதாக ரிறி தெரிவித்தார்.

என்ன நடந்திருக்கும் என யோசித்த தாய் இரவு மகன் படுக்கையில் இருந்து எழுந்து வெளியே சென்று அதனை கொண்டு வந்துள்ளான் என உணர்ந்து தான அச்சம் கொண்டதாக கூறினார்.

இவரது மகன் தாய் உறங்கும் போது நாயின் கதவினூடாக ஊர்ந்து சென்று வீட்டின் கொல்லைப்புறத்தில் கிடந்த தெளிப்பானை கொண்டு வந்துள்ளான் என்பது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.

இந்த சாதனம் உடல் இயலாமை உடையவர்கள் அல்லது அறிவாற்றல் இழந்தவர்களை பராமரிப்பவர்களும் பயன் படுத்தலாம் என கருதப்படுகின்றது.

மேலும் கஜெட்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments