இலகுவாக எடுத்துச் செல்லக்கூடிய iPhone Printer அறிமுகம்

Report Print Givitharan Givitharan in கஜெட்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

இன்றைய நவீன உலகில் அநேகமான இலத்திரனியல் சாதனங்கள் கையடக்கமாக வடிவமைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படுகின்றன.

இவற்றின் வரிசையில் தற்போது iPhone Printer சாதனமும் இணைந்துள்ளது.

இச் சாதனத்தினைப் பயன்படுத்தி ஐபோன்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஏனைய ஆவணங்களை பிரிண்ட் செய்துகொள்ள முடியும்.

ஐபோன்களில் மட்டுமல்லாது ஏனைய iOS சாதனங்களிலும் இணைத்து பயன்படுத்த முடியும்.

எனினும் iPhone 7 Plus, iPhone 7, iPhone SE, iPhone 6s Plus, iPhone 6s, iPhone 6 Plus, iPhone 5s மற்றும் iPhone 5 என்பவற்றினை நேரடியாக இணைத்து பயன்படுத்தக்கூடிய வகையில் இப் பிரிண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இச் சாதனம் அடுத்த மாதம் முதலே விற்பனைக்கு வரவுள்ளது.

தற்போது முற்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இதன் விலையானது 150 யூரோக்களாகக் காணப்படுகின்றது.

மேலும் கஜெட்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments