தானியங்கி கார் தொழில்நுட்பத்திற்கு 1 பில்லியன் டொலர் ஒதுக்கிய முன்னணி நிறுவனம்

Report Print Givitharan Givitharan in கியர்
0Shares
0Shares
lankasrimarket.com

கூகுள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் தானியங்கி கார்களை உருவாக்கும் முயற்சியில் போட்டி போட்டுக்கொண்டு களமிறங்கியிருந்தன.

இவற்றில் சில நிறுவனங்கள் வெற்றி கண்டு கார்கள் பரிசோதனை நிலையில் காணப்படுகின்றன.

வேறு சில நிறுவனங்கள் இடையில் இம் முயற்சியை கைவிட்டிருந்தன.

இவ்வாறான நிலையில் அமெரிக்காவினை தளமாகக் கொண்டு செயற்படும் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான Ford இம் முயற்சியை சவாலாக எடுத்துள்ளது.

அதாவது தானியங்கி கார்களுக்கு தேவையான செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களை உருவாக்குவதற்காக சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது.

இத் திட்டத்திற்காக Argo AI என்ற நிறுவனத்துடன் Ford கைகோர்த்துள்ளது.

Ford நிறுவனம் 2021ம் ஆண்டில் தனது தானியங்கி கார்களை சந்தப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஏற்கணவே அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த விசப் பரீட்சையை கையில் எடுத்துள்ளது.

மேலும் கியர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments