ஒரு லட்சம் அகதிகளை மீண்டும் பரிசோதிக்க அரசு முடிவு: காரணம் இதுதான்

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

ஜேர்மனியில் புகலிடத்திற்காக விண்ணப்பம் செய்துள்ள சுமார் ஒரு லட்சம் அகதிகளின் விண்ணப்பங்களை மீண்டும் பரிசோதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனியில் புகலிடம் கோரி Franco A 28 என்ற நபர் விண்ணப்பம் செய்துள்ளார். இவரது விண்ணப்பமும் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

advertisement

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரியாவில் உள்ள விமான நிலையத்தில் அந்நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

நபரிடம் துப்பாக்கி இருந்ததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது, அந்நபர் அகதி இல்லை என்றும் ஜேர்மன் நாட்டின் முன்னாள் ராணுவ வீரர் எனவும் தெரியவந்தது.

இத்தகவலால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், ராணுவ வீரரான ஒருவருக்கு அகதி என்ற அடிப்படையில் தவறாக புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற போலி வேடங்களில் பலரும் ஜேர்மனியில் நுழைந்திருக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஜேர்மன் உள்துறை அமைச்சரான Thomas de Maiziere என்பவர் வெளியிட்டுள்ள தகவலில், ஏற்கனவே புகலிடத்திற்காக விண்ணப்பம் செய்துள்ள சுமார் ஒரு லட்சம் அகதிகளின் விண்ணப்பங்களை மீண்டும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்பரிசோதனை மூலம் எதிர்கால ஆபத்துக்களை தவிர்க்க முடியும் எனவும், புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்களை கவனமாக ஆராயப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments