காரில் பிரசவமான குழந்தை: உதவி கிடைக்காமல் உயிரிழந்த தாயார்

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

ஜேர்மனி நாட்டில் கர்ப்பிணி பெண் ஒருவர் காரில் குழந்தை பிரசவம் செய்துவிட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் உள்ள டிரெஸ்டன் நகரில் தான் இத்துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

advertisement

இந்நகரில் வசித்து வந்த நபர் ஒருவர் தனது கர்ப்பிணி மனைவி காணாமல் போய்விட்டதாக சில தினங்களுக்கு முன்னர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரை பெற்ற பொலிசார் கர்ப்பிணி பெண்ணை தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், ஒரு ஏரிக்கரைக்கு அருகில் சந்தேகத்திற்குரிய கார் ஒன்று நிற்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலை பெற்ற பொலிசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தபோது காருக்குள் பச்சிளம் ஆண் குழந்தை இருந்துள்ளது.

அருகில் தாயார் உயிரற்ற சடலமாக கிடந்துள்ளார். குழந்தையை மீட்டு பரிசோதனை செய்தபோது அதிர்ஷ்டவசமாக அது உயிருடன் இருந்துள்ளது.

குழந்தையை பொலிசார் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தாயாரை சோதனை செய்தபோது பிரசவம் செய்த பிறகு உதவிக்கு ஆள் கிடைக்காத காரணத்தினால் அவர் வலியால் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் மூன்றாவது நபரின் தலையீடு இல்லை எனவும் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

எனினும், காருக்குள் கர்ப்பிணி பெண் பிரசவம் செய்துவிட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments