ஜேர்மனியில் திருமண வயது அதிகரிப்பு: புதிய சட்டம் அமுலாகியது

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasri.com

ஜேர்மனியில் ஆண் மற்றும் பெண் திருமணம் செய்யும் வயது 18-ஆக அதிகரித்துள்ள புதிய சட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் ஜேர்மனியில் மட்டுமே அதிகளவில் அகதிகள் புகலிடம் கோரி செல்கின்றனர்.

வெளிநாட்டு அகதிகள் பல்வேறு கலாச்சார பின்னணியுடன் இருப்பதால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வயதில் திருமணம் செய்துக்கொள்கின்றனர்.

குறிப்பாக, 16 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளும் திருமணத்திற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

வயது மூத்த மணமகனை 16 வயது சிறுமி திருமணம் செய்து கொள்வதால் அவளால் சுயமான முடிவுகளை எடுக்க முடிவதில்லை.

குடும்ப விவகாரங்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் கணவனின் முடிவை சார்ந்து மனைவி வாழ வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இது மட்டுமில்லாமல், சிறு வயதில் சிறுமிகள் திருமணம் செய்து வைக்கப்படுவதால் அவர்களுக்கு பல்வேறு இன்னல்களும் ஏற்படுகின்றன.

இதனைக் கருத்தில் கொண்ட ஆளும் கட்சி நேற்று அதிரடியான புதிய சட்டத்தை அமுலாக்கியுள்ளது.

இப்புதிய சட்டத்தின் அடிப்படையில், ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலினரும் 18 வயது அடைந்திருந்தால் மட்டுமே திருமணம் செய்துக்கொள்ள முடியும். மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

எனினும், சில சிக்கலான பின்னணியில் உள்ள தம்பதிகளுக்கு வரையறுக்கப்பட்ட வயதை விட குறைந்து இருந்தாலும் சில கட்டுப்பாடுகளுடன் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று திருமணம் செய்துக்கொள்ளலாம் என ஜேர்மன் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments