நள்ளிரவில் அகதிகள் முகாமில் தீ விபத்து: 37 பேர் காயம்

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து 37 பேர் காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஜேர்மனியில் அமைந்துள்ள Bremen நகரில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று நள்ளிரவு நேரத்தில் அங்குள்ள அகதிகள் முகாமில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறைக்கு அவசர அழைப்பு வந்துள்ளது.

தகவல் பெற்றதும் 27 வாகனங்களில் 70 தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றுள்ளனர். ஐந்து மாடிக்குடியிருப்பில் ஏற்பட்ட தீயை வீரர்கள் கடுமையாக போராடி அணைத்துள்ளனர்.

எனினும், இவ்விபத்தில் 37 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் உள்பட 10 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அகதிகள் முகாமில் உள்ள குப்பை கிடங்கில் இருந்து தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும், இவ்விபத்து தொடர்பாக அப்பகுதி பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் ஜேர்மனி மட்டுமே அதிக எண்ணிக்கையில் அகதிகளுக்கு புகலிடம் அளித்து வருகிறது.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 10 லட்சம் புலம்பெயர்ந்தவர்களை தன்னுடைய நாட்டிற்குள் ஜேர்மன் அரசு அனுமதித்துள்ளது.

புகலிடம் கோரி வந்துள்ளவர்களில் உள்நாட்டு யுத்தங்களால் தப்பி வந்துள்ள சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்தவர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments