ஜேர்மனியில் குவிந்துள்ள வேலை வாய்ப்புகள்

Report Print Fathima Fathima in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் இந்த ஆண்டு இறுதிக்குள் 760,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியிருக்கும் என்று தெரியவந்துளளது.

ஜேர்மனியில் வணிகம் தொடர்பாக ஆய்வு நடத்திய German Chambers of Commerce and Industry-யே (DIHK) இத்தகவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக மருத்துவ துறையிலேயே அதிகளவான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும், ஆரோக்கியம் தொடர்பில் மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்கெட்டிங் மற்றும் ஆராய்ச்சி தொடர்பான வேலையில் கணிசமான அளவே வேலைவாய்ப்பு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி, முதலீடு மற்றும் தயாரிப்பு பணிகளில் வேலை வாய்ப்பு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து DIHK ன் நிறுவனத் தலைவர் கூறுகையில், Dual Education System-யை பலப்படுத்த வேண்டும் என்றும், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தொழிலாளர்களின் நிலையை அறிந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments