தூசிகள் சேர்ந்து திடீரென உருவான சூறாவளி: மிரண்ட மக்கள்

Report Print Raju Raju in ஜேர்மனி
0Shares
0Shares
Cineulagam.com

ஜேர்மனியின் கால்பந்து மைதானத்தில் 15 மீட்டர் உயரத்தில் தூசிகள் ஒன்றிணைந்து சூறாவளியாக சுழன்ற வீடியோ வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் Cologne நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் இளைஞர்கள் சிலர் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென சிறிய அளவில் சூறாவளி அங்கு உருவானது. அதாவது, தூசிகள் எல்லாம் ஒன்றிணைந்து 15 மீட்டர் உயரத்துக்கு சூறாவளியாக மாறி மைதானத்தில் சுழன்ற ஆரம்பித்தது.

இதை பார்த்து ஆச்சரியமடைந்த கால்பந்து வீரர்களில் சிலர் சுழலும் சூறாவளிக்குள் நுழைந்து வெளியில் வந்தனர்.

இன்னும் சிலர் கண்களில் தூசிபடுவதை தவிர்க்க கைகளால் கண்களை மூடியபடியே அதன் அருகே ஓடினார்கள்.

இதையடுத்து சில நொடிகளில் தூசியால் உருவான சூறாவளி மறைந்து போனது.

இந்த காட்சியை வீடியோவாக எடுத்த ஒருவர் பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.

இது வரை லட்சக்கணக்கான இணையதளவாசிகள் வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர், மேலும், 1200 முறை வீடியோ பகிரப்பட்டுள்ளது.

ஜேர்மனி வானிலை நிலைய அதிகாரி Cornelia Urban கூறுகையில், காற்றானது மிகவும் சூடாக தரையில் சுழன்று கொண்டு தொடங்கும் போது இது போன்ற சூறாவளி ஏற்படும் என கூறியுள்ளார்.

ஜேர்மனியை பொருத்தவரை தூசிகளால் ஏற்படும் சூறாவளிகள் மிக அரிதாகவே தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments