ஜேர்மனியில் ஆதரவற்ற நபரை துன்புறுத்திய அகதிகளுக்கு சிறைத்தண்டனை

Report Print Fathima Fathima in ஜேர்மனி
0Shares
0Shares
lankasri.com

ஜேர்மனியின் பெர்லின் ரயில் நிலையத்தில் ஆதரவற்ற நபரை துன்புறுத்திய அகதிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று பெர்லின் ரயில் நிலையத்தில் வீடற்ற போலந்து நாட்டை சேர்ந்த 37 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அகதிகள் குழுவினர், வீடற்ற நபரின் அருகே இருந்த காகிதத்தில் தீ வைத்ததுடன் தப்பியோடி உள்ளனர்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் தாக்குதலுக்கு உள்ளான நபரை காப்பாற்றியுள்ளனர்.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொலிசார், தாக்குதல் நடத்திய நபர்கள் சிரியாவை சேர்ந்தவர்கள் என்றும், 16- 21 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதையும் கண்டுபிடித்தனர்.

தீவிர விசாரணையின் முடிவில் ஐந்து பேரை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று முன்தினம் நீதிமன்றத்துக்கு வந்த போது, முக்கிய குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்னை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட நபருக்கு உதவிசெய்ய மறுத்த குற்றச்சாட்டில் இருவருக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே 19 வயதிற்குட்பட்ட இருவர் இளைஞர் தடுப்பு மையத்தில் நான்கு வாரங்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் 2014- 2016ம் ஆண்டுக்குள்ளான காலகட்டத்தில் ஜேர்மனிக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments