பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான குழந்தை: தந்தைக்கு 11 ஆண்டுகள் சிறை

Report Print Arbin Arbin in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் சொந்த குழந்தையையே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய கொடூர தந்தைக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது நீதிமன்றம்.

ஜேர்மனியில் சிறுவர்கள் மீது அதீத நாட்டம் கொண்ட 29 வயது நபர் ஒருவர் தனது நண்பருடன் இணைந்து குறித்த பாதக செயலை மேற்கொண்டுள்ளார்.

தமது சொந்த குழந்தையை கயிறால் பிணைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளது ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நிரூபணமாகியுள்ளது.

மட்டுமின்றி குறித்த கொடூர நிகழ்வினை சமூக வலைதளம் வாயிலாக தமது நண்பர்களுக்கும் நேரலை செய்துள்ளது கொடூரத்தின் உச்சம் என நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது குறித்த நபர், தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதுடன், தமது மகள் மீது தாம் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், எந்த மன நிலையில் இதுபோன்றதொரு பாதகத்தை தாம் செய்யத் துணிந்தேன் என இதுவரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நண்பருடன் இணைந்து மேற்கொண்ட இந்த விபரீத செயலின் புகைப்படங்கள் மற்றும் காணொளி துணுக்குகளை ஆபாச வலைதளங்களிலும் பதிவேற்றியுள்ளார் இந்த தந்தை.

இந்த வழக்கு தொடர்பில் கடந்த நவம்பர் மாதம் கைதான போது, பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், துன்புறுத்தலின் போது குழந்தை துடி துடித்தது தமக்கு வெறியூட்டியதாகவும், அதனால் மேலும் பல வகையில் துன்புறுத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

குறித்த நிகழ்வினை இணையத்தில் காண நேர்ந்த நபர் ஒருவர் பொலிசாரிடம் முறையிட்ட பின்னரே இவர் கைதாகியுள்ளார். குழந்தை மீட்கப்படும்போது அதன் உடலில் மது மற்றும் போதை மருந்து தரப்பட்டதன் அடையாளம் இருந்துள்ளதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

தற்போது குழந்தை தனது தாயாருடன் அவரது பெற்றோரது குடியிருப்பில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி இந்த வழக்கு தொடர்பாக, குறித்த பாலியல் வன்முறையை நேரலையில் கண்டுகளித்த 50 பேர் மீது வழக்கு பதிந்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments