பெர்லின் தாக்குதல்தாரியின் சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு

Report Print Raju Raju in ஜேர்மனி
0Shares
0Shares
lankasri.com
advertisement

ஜேர்மனியின் பெர்லினில் லொறி மூலம் தீவிரவாத தாக்குதல் நடத்திய நபரின் சடலம் துனிசியாவில் உள்ள அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பெர்லினில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் லொறி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதில் 12 பேர் பலியானார்கள்.

advertisement

இதனை நடத்தியது ஐஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த Anis Amri (24) என்பதும், துனிசியா நாட்டை சேர்ந்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

நான்குநாள் தேடுதல் வேட்டைக்கு பின்னர், இத்தாலியின் Milanல் 23ஆம் திகதி பொலிசாரால் Anis Amri சுட்டுக் கொல்லப்பட்டான்.

இந்நிலையில் Anisன் சடலத்தை துனிசியா நாட்டில் உள்ள அவர் குடும்பத்தாரிடம் ஒப்படைத்து விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

Anisன் சடலம் மத்திய துனிசியாவில் உள்ள அவனின் சொந்த ஊரான Oueslatiaல் புதைக்கப்படவுள்ளதாக Anisன் சகோதரர் Abdelkader கூறியுள்ளார்.


மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments