தீப்பற்றி எரிந்த பேருந்து: 30 பேர் படுகாயம்...17 பேர் காணவில்லை

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனி நாட்டில் லொறி மீது மோதி பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்த விபத்தில் 18 பேர் பலியாகியுள்ளதாகவும், 30 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பவேரியா மாகாணத்தில் உள்ள Stammbach நெடுஞ்சாலையில் தான் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

சுற்றுலா பேருந்து ஒன்று இன்று பிற்பகல் நேரத்தில் சாலையில் சென்றுக்கொண்டு இருந்தபோது லொறி மீது மோதியதாக கூறப்படுகிறது.

பேருந்து மோதிய வேகத்தில் தீப்பற்றி எரிந்துள்ளது. பேருந்துக்குள் இருந்த 30 பேர் படுகாயங்களுடன் வெளியே தப்பியுள்ளனர்.

ஆனால், எஞ்சிய 18 பேர் வெளியேற முடியவில்லை என்பதால் அவர்கள் அனைவரும் உயிரிழந்துருக்கலாம் என பொலிசார் அச்சம் தெரிவித்துள்ளனர்.

விபத்திற்கு பிறகு சம்பவ இடத்திற்கு ஹெலிகொப்டர் மற்றும் மீட்புக்குழுவினர் வந்து சேர்ந்துள்ளனர்.

பின்னர், படுகாயம் அடைந்த நபர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் அபாயக்கட்டத்தில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், பேருந்து எவ்வாறு தீப்பற்றி எரிந்தது என்பது குறித்து பொலிசாருக்கு தெளிவான பதில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

விபத்தை தொடர்ந்து நெடுஞ்சாலையின் இருபுறமும் போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments