பொது இடத்தில் உடலுறவு கொண்ட பொலிஸ் அதிகாரிகள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasri.com
advertisement

ஜேர்மனியில் பொது இடத்தில் உடலுறவில் ஈடுப்பட்ட பல பொலிஸ் அதிகாரிகள் பணியில் இருந்து தற்காலிகமாக வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மன் தலைநகரான பெர்லினில் எதிர்வரும் யூலை 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் G20 மாநாடு நடைபெற உள்ளது.

advertisement

அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் மாநாடு நடைபெற உள்ள Hamburg நகரில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட நூற்றுக்கணக்கான பொலிசார் அனுப்பப்பட்டுள்ளனர்.

ஆனால், ஹேம்பர்க் நகரில் முகாம்களை அமைத்த பொலிசார் அத்துமீறி நடந்துள்ளனர்.

சிலர் பொது இடங்களில் உடலுறவு கொண்டதுடன் சிறுநீர் கழித்து பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

பெண் பொலிசார் சிலரும் அரைகுறை ஆடைகளுடன் மேடைகளில் ஆபாசமாக நடனம் ஆடியுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகளின் இந்நடவடிக்கை உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு புகாராக சென்றுள்ளது.

இதனை தொடர்ந்து முகாம்களுக்கு வருகை தந்த உயர் அதிகாரிகள் புகார் கொடுக்கப்பட்ட பொலிசாரை கடுமையாக கண்டித்துள்ளனர்.

மேலும், பொதுச் சொத்துக்களையும் பொலிசார் சேதம் செய்ததால் பலரையும் தற்காலிகமாக வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பொது மக்களை காக்க வேண்டிய பொலிசார் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துக்கொண்டது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பொலிசார் மீதான இந்நடவடிக்கையை காவல் துறை உறுதி செய்துள்ளது. மேலும், G20 மாநாட்டிற்கு மாற்று பொலிசார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments