திருடப்பட்ட 100 கிலோ தங்க நாணயம்: சிசிடிவி காட்சிகள் வெளியானது

Report Print Fathima Fathima in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியின் பெர்லின் மியூசியத்திலிருந்து திருடப்பட்ட அரிய தங்க நாணயம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

பெர்லினில் உள்ள போட் மியூசியத்திலிருந்து 100 கிலோ எடை கொண்ட அரிய தங்க நாணயம் கடந்த மார்ச் மாதம் திருடப்பட்டது.

எலிசபெத் மகாராணியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள இந்த நாணயத்தின் மதிப்பு ஒரு மில்லியன் யூரோவாகும், சந்தை மதிப்பு 3.7 மில்லியன் யூரோ என தெரிவிக்கப்படுகிறது.

மியூசியத்திற்கு அருகே உள்ள ரயில்வே இருப்புப்பாதை வழியாக திருடர்கள் நுழைந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டனர்.

தற்போது இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை பொலிசார் வெளியிட்டுள்ளனர், இதில் மூன்று நபர்கள் தங்களது முகத்தை முழுவதுமாக மறைத்தபடி செல்கின்றனர்.

சிசிடிவி காட்சிகளில் சிக்கிவிடுவோம் என்ற பயத்தில் கீழே குனிந்தபடியே நடந்து செல்கின்றனர்.

மர்மநபர்கள் தொடர்பான தகவல்களை தெரிவிப்பவர்களுக்கு 5,000 யூரோ அன்பளிப்பு வழங்கப்படும் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments