ஜேர்மனிக்கு புலம்பெயர்பவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்

Report Print Raju Raju in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனிக்குள் புலம்பெயர Family Reunification திட்டத்தின் கீழ் சிரியா மற்றும் ஈராக் நாட்டிலிருந்து 300,000 பேருக்கு வாய்ப்பு உள்ளது தெரியவந்துள்ளது.

ஜேர்மனியின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 90,389 பேர் இந்த வருடத்தின் ஆறு மாதங்களில் ஜேர்மனிக்கு புகலிடம் தேடி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே அளவுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு மக்கள் ஜேர்மனியை நோக்கி வருவார்கள் எனவும் தோராயமாக வருட இறுதியில் எண்ணிக்கை 180,000 ஆக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த 2015ம் ஆண்டில் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 890,000 ஆகும்.

இந்நிலையில் ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் Sigmar Gabrielன் அலுவலகம் கூறுகையில், Family Reunification திட்டத்தின் கீழ் ஜேர்மனியில் உள்ள அவர்கள் குடும்பத்தினருடன் இணைய 200,000லிருந்து 300,000 வரையிலான மக்கள் அனுமதிக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments