கழிவறையில் மாணவியை கற்பழித்த நபர்: தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனி நாட்டில் உள்ள பல்கலைக்கழக கழிவறையில் மாணவி ஒருவரை கற்பழித்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜேர்மனியில் உள்ள முனிச் நகரில் Ludwig Maximilian என்ற பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.

இப்பல்கலைக்கழகத்தில் சபைன் என்ற இளம்பெண் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் பல்கலைக்கழக கழிவறையில் 26 வயதான நபர் திடீரென நுழைந்துள்ளார்.

பின்னர், தனியாக இருந்த சபைன்னை கொடூரமாக கற்பழித்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

இச்சம்பவம் நிகழ்ந்து இரண்டு தினங்களுக்கு பின்னர் மீண்டும் அதே நபர் கழிவறைக்கு சென்று மற்றொரு மாணவியை கற்பழிக்க முயன்றுள்ளார்.

ஆனால், துணிச்சலாக செயல்பட்ட அம்மாணவி நபரை கீழே தள்ளிவிட்டு தப்பியுள்ளார். இவ்விரு குற்றங்கள் காரணமாக நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

நபர் மீதான குற்றங்கள் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கபட்டது.

இந்நிலையில், குற்றவாளியை மருத்துவ பரிசோதனை செய்தபோது அவர் பல ஆண்டுகளாக மனநல ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டது.

இக்காரணங்களின் அடிப்படையில், நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை இன்று வந்தபோது குற்றவாளியை 6 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் மனநல மருத்துவமனையில் வைத்து பரிசோதனை செய்ய வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments