சுற்றுலா சென்ற ஜேர்மன் பெண்கள் படுகொலை

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனி நாட்டை சேர்ந்த இரண்டு பெண்கள் எகிப்து நாட்டிற்கு சுற்றுலா சென்ற போது மர்ம நபர் ஒருவரால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியை சேர்ந்த இரண்டு பெண்கள் சில தினங்களுக்கு முன்னர் எகிப்தில் உள்ள செங்கடல் கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

பெயர் வெளியிடப்படாத இருவரும் நேற்று கடற்கரையில் உலாவி வந்த போது மர்ம நபர் ஒருவர் திடீரென கத்தியால் தாக்கியுள்ளார்.

எதிர்பாராமல் நிகழ்ந்த இத்தாக்குதலில் இரண்டு ஜேர்மன் பெண்களும் பரிதாபமாக பலியாகியனர்.

மேலும், சிலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எகிப்தில் நிகழ்ந்த இத்தாக்குதலுக்கு ஜேர்மன் வெளியுறவு துறை அமைச்சகம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

தாக்குதல் நிகழ்ந்த மாகாண ஆளுநர் பேசிய போது, தாக்குதலுக்கான காரணம் அறியப்படவில்லை எனவும், தாக்குதல் நடத்தியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

மேலும், தாக்குதலை நடத்திய நபரை கைது செய்ய இரு நாட்டு பொலிசாரும் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எகிப்தில் சுற்றுலா செல்லும் வெளிநாட்டு பயணிகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு ரஷ்ய நாட்டு விமானம் ஒன்று சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு எகிப்தில் இருந்து புறப்பட்டபோது நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இத்தாக்குதலில் விமானத்தில் பயணம் செய்த 224 நபர்களும் உயிரிழந்ததை தொடர்ந்து எகிப்து நாட்டு சுற்றுலா துறை பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments