13 வயது சிறுமியை கற்பழிக்க அமெரிக்கா சென்ற ஜேர்மன் குடிமகன் கைது

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் உள்ள 13 வயது சிறுமியை சித்ரவதை செய்து கற்பழிக்க அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட ஜேர்மன் குடிமகன் ஒருவர் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜேர்மனி நாட்டை சேர்ந்த Meinard Kopp(55) என்பவர் சிறுமிகளை சித்ரவதை செய்வதிலும் பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொள்வதிலும் அதிக ஆர்வம் உடையவர்.

சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவரிடம் ஓன்லைன் மூலமாக பேசி தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

‘என்னுடைய மகளுக்கு 13 வயது ஆகிறது. நீங்கள் அமெரிக்காவிற்கு வந்தால் என் மகளை கற்பழிக்கவும் சித்ரவதை செய்துக்கொள்ளவும் நானே அனுமதி அளிக்கிறேன்’ என அந்த நபர் கூறியுள்ளார்.

’மிகவும் நன்றி. சிறுமிகளை கற்பழிப்பதை விட அவர்களை கொடூரமாக சித்ரவதை செய்யும்போது தான் எனக்கு திருப்தி ஏற்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்னர், தந்தை ஒருவரின் அனுமதியுடன் அவருடைய 11 வயது மகளை சித்ரவதை செய்து கற்பழித்தேன்.

நீங்களும் அனுமதி கொடுத்து விட்டதால் உடனே அமெரிக்கா புறப்பட்டு வருகிறேன்’ எனக் கூறிய முதியவர் அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

பின்னர், அமெரிக்காவில் உள்ள Orlando விமான நிலையத்தில் அவர் தரையிறங்கியபோது பொலிசாரால் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

தன்னுடன் ஓன்லைனில் பேசியதும் தன்னை அமெரிக்காவிற்கு வரவழைத்ததும் பொலிஸ் அதிகாரி என்பது முதியவருக்கு பின்னர் தான் தெரியவந்தது.

நபரிடன் இருந்த பெட்டியை சோதனை செய்தபோது, சித்ரவதை செய்வதற்கு தேவையான ஆயுதங்கள் இருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர்.

பொலிசாரின் விசாரணையில் அனைத்து உண்மையையும் முதியவர் ஒப்புக்கொண்டார்.

முதியவரின் குற்றங்கள் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments