சொகுசு கார்கள் கடத்தல்: ஜேர்மனி அதிகாரிகள் பொறியில் சிக்கிய சுவிஸ் கடத்தல்காரன்

Report Print Basu in ஜேர்மனி
0Shares
0Shares
lankasri.com
advertisement

சுவிட்சர்லாந்திலிருந்து பெராரி சொகுசு கார்களை கடத்த முயன்ற நபரை ஜேர்மனி அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த நபர் ஒருவர் லொறி ஒன்றில் 10 கார்களை ஏற்றிக்கொண்டு ஜேர்மனிக்கு பயணித்துள்ளார்.

advertisement

அப்போது ஜேர்மனி எல்லை பகுதியான Hilzingenல் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்து ஜேர்மனி சுங்க அதிகாரிகள் லொறியை நிறுத்தி சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

அந்த சோதனையில், லொறியில் இருந்து 10 கார்களில் 8 பயன்படுத்தப்பட்ட கார்கள் மட்டுமே சரியான இறக்குமதி கட்டண சான்றுடன் இருப்பது தெரியவந்துள்ளது.

மீதம் இருந்த இரண்டு விலை உயர்ந்த சொகுசு கார்கள் எந்த வித இறக்குமதி சான்றிதழின்றி ஜேர்மனிக்கு கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. கடத்த முயன்ற இரண்டு சொகுசு கார்கள் 10,000 பிராங்குகள் மட்டுமே என லொறி ஓட்டுநர் மதிப்பிட்டு வைத்துள்ளார்.

ஆனால், அதன் உண்மையான மதிப்பு 5,07,000 பிராங்குகள் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த இரண்டு கார்களையும் கொண்டு செல்ல அபராதம் இன்றி 1,40,000 பிராங் இறக்குமதி கட்டணம் செலுத்த உத்தரவிட்டுள்ளனர்.

ஓட்டுநர் இறக்குமதி கட்டணம் செலுத்தாததால் சுங்க அதிகாரிகள் இரண்டு சொகுசு கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர், 8 கார்களை எடுத்துச் செல்ல ஓட்டுநருக்கு அனுமதி அளித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்