ஜேர்மனி சூப்பர்மார்க்கெட்டில் சரமாரி தாக்குதல்: பொலிஸ் எச்சரிக்கை

Report Print Basu in ஜேர்மனி
328Shares
328Shares
lankasrimarket.com

ஜேர்மனி சூப்பர்மார்க்கெட்டில் கத்தியுடன் நுழைந்த மர்ம நபர், வாடிக்கையாளர்களை சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாம்பர்க், Barmbek மாவட்டத்தில் உள்ள சூப்பர்மார்க்கெட் ஒன்றிலே இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

சூப்பர்மார்க்கெட்டில் கத்தியுடன் நுழைந்த மர்ம நபர் வாடிக்கையாளர்களை சரமாரியாக தாக்கி விட்டு சம்பவயிடத்திலிருந்து தப்பிதுள்ளான். இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பலர் காயமடைந்துள்ளனர்.

மர்ம நபரை பின்தொடர்ந்த ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் தாக்குதலில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ளனர்.

அதேசமயம், பொதுமக்கள் யாரும் தாக்குதல் நடத்திய பகுதிக்கு அருகில் வரவேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

ஒரே ஒருவன் தான் தாக்குதலில் ஈடுபட்டுள்ளான் என்பதை உறுதி செய்துள்ள பொலிசார், தாக்குதல்தாரியின் நோக்கம் பற்றி தகவல் இல்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்