மில்லியன் மதிப்பிலான தங்கப் புதையல் கண்டுபிடிப்பு: சிக்கலில் புதையல் வேட்டைக்காரர்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
0Shares
0Shares
lankasri.com
advertisement

ஜேர்மனியின் அடர்ந்த வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நாஜிகள் காலத்து மில்லியன் விலை மதிப்புள்ள தங்கக் குவியலை மீட்க முடியாமல் புதையல் வேட்டைக்காரர் தவித்து வருகிறார்.

ஜேர்மனியில் உள்ள பவேரியா பகுதியில் குறித்த தங்கப்புதையலை புதையல் வேட்டைக்காரர் ஒருவர் அரும்பாடுபட்டு கண்டுபிடித்துள்ளார். ஆனால் அந்த நிலத்தின் உரிமையாளர் குறித்த புதையலை அங்கிருந்து மீட்க தடையாக இருப்பதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

advertisement

76 வயதான Hans Glueck என்பவர் குறித்த அரிய புதையலை கண்டுபிடித்துள்ளார். அதில் குவியலாக தங்கம், வைரம் உள்ளிட்டவையும் அரிய ஓவியங்கள் மற்றும் தபால் தலைகள் என சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலான பொக்கிஷங்களும் அதில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் குறித்த நிலத்தின் உரிமையாளர் அந்த புதையலை விட்டுத்தர மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி குறித்த புதையலை கைப்பற்ற வேண்டும் எனில் உரிய திட்டமிடலும் அதற்குரிய வரைபடங்களும் தேவை எனவும், ஆனால் இவை எவையும் அந்த நில உரிமையாளரிடம் இல்லை எனவும், அவரால் குறித்த புதையலை கைப்பற்றுவது கடினமே எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்