குடும்பத்தினருடன் சேர்த்து வையுங்கள்: கெஞ்சும் ஐ.எஸ் தீவிரவாதி

Report Print Arbin Arbin in ஜேர்மனி
402Shares
402Shares
lankasrimarket.com

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்து செயலாற்றிய ஜேர்மானிய இளம்பெண் ஒருவர் தம்மை குடும்பத்துடன் சேர்த்து வைக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சிரியாவின் மொசூல் நகரில் இருந்து மீட்கப்பட்ட 16 வயது ஜேர்மானிய மாணவி தம்மை குடும்பத்தினருடன் சேர்த்து வைக்க வேண்டும் என ராணுவத்தினரிடம் கெஞ்சியுள்ளார்.

ஜேர்மனியில் இருந்து தலைமறைவான பின்னர் முதன்முறையாக ஈராக் தலைநகர் பாக்தாதில் தனியார் ஊடகங்களிடம் பேசிய Linda Wenzel(16) குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்த நாட்டில் இருந்து வெளியேற வேண்டும். ஆயுதக் குவியல்களின் இடையில் நின்று, சத்தங்களில் நின்று. எனது குடும்பத்தினரிடம் செல்ல வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஐ.எஸ் பயங்கரவாத குழுவில் இணைந்தற்கு தாம் வருந்துவதாக கூறும் லிண்டா, ஜேர்மன் அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

கடந்த ஓராண்டுக்கு முன்னர் பிராங்போர்ட் விமான நிலையத்தில் இருந்து துருக்கி சென்று அங்கிருந்து சிரியா சென்றுள்ளார் லிண்டா. ஐ.எஸ் ஆதரவு குழுக்களின் இணைய பிரசாரத்தில் ஈர்க்கப்பட்டு அவர்களின் வழிகாட்டுதலின்படி ஈராக் கடத்தப்பட்டுள்ளார்.

லிண்டா தற்போது அமெரிக்க மற்றும் ஈராக் சிறப்பு அதிகாரிகளால் பாக்தாதில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

ஜேர்மானிய அதிகாரிகளால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர் நாடு திரும்ப நேரிட்டால், குறைந்தது 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, லிண்டா குறித்து அவர் தாயார் தெரிவிக்கையில், ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கடுமையாக மூளைச்சலைவை செய்யப்பட்டே அவர் இங்கிருந்து சிரியா சென்றுள்ளார். அவர் நாடு திரும்புவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இப்போதும் உள்ளது என்றார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்