ஜேர்மன் வாழ் ஈழத்தமிழ் பெண்ணின் சாதனைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த அந்தஸ்து

Report Print Shalini in ஜேர்மனி
0Shares
0Shares
lankasri.com

ஜேர்மனியில் வசித்து வரும் ஈழத்தமிழ் கலைஞரான ஒலிவியா தனபாலசிங்கத்தின் வீணை இசையினை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் (A.R.Rahman) தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஊடாக பகிர்ந்துள்ளார்.

A.R.Rahman தனது சமூக வலைத்தளங்களில் இப்படியான இசைக்கருவி மீளாக்கத்தினை (instrumental cover) பகிர்ந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

A.R.Rahman சமூக வலைத்தளங்களின் ஊடாக தனது 40 மில்லியனிற்கும் மேற்பட்ட அபிமானிகளுக்கு ஈழத்தமிழ் கலைஞர் ஒலிவியாவின் வீணை இசையினை தெரியப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் A.R.Rahman இசையில் வெளிவந்த திரைப்படம் ஒன்றில் அனைவராலும் ரசிக்கப்பட்ட “சரட்டு வண்டில” என்ற பாடலை ஒலிவியா.T வீணையில் மீட்டி பதிவேற்றம் செய்திருந்தார்.

அதனை ரசித்த A.R.Rahman தனது அபிமானிகளுடன் இதை பகிர்ந்துள்ளார்.

ஜேர்மனில் பிறந்த ஈழத்தமிழரான ஒலிவியா தனபாலசிங்கம் கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், வீணை என்பவற்றினை முறைப்படி கற்றுத்தேர்ந்தவர்.

இந்த ஈழத்தமிழர் ஒலிவியாவின் இந்த சாதனைக்கு A.R.Rahman கொடுத்த இந்த அந்தஸ்து ஊடகங்களிலும் இணையங்களிலும் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் ஒலிவியாவும் A.R.Rahman தனக்கு கொடுத்த இந்த அந்தஸ்துக்கும், தனது இசையை பகிர்ந்து கொண்டதற்கும் பேஸ்புக் ஊடாக நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்