ஜேர்மனி அதிரடி உத்தரவு

Report Print Basu in ஜேர்மனி
0Shares
0Shares
Cineulagam.com

ஜேர்மனியில் உள்ள வியட்நாமிய உளவுத்துறை சேவை பிரதிநிதி 48 மணிநேரத்தில் ஜேர்மனியலிருந்து வெளியேற வேண்டும் என ஜேர்மனி அதிரடி உத்தரவிட்டுள்ளது.

ஊழல் வழக்கில் சந்தேகிக்கப்பட்ட வியட்நாம் தொழிலதிபரை, ஜேர்மனியிலருந்து நாடு கடத்தி சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பியதாக வியட்நாம் மீது ஜேர்மனி குற்றம்சாட்டியுள்ளது.

வியட்நாமை சேர்ந்த தொழிலதிபர் Trinh Xuan Thanh ஜேர்மனியில் புகலிடம் கோரி இருந்த நிலையில், மாநில நிறுவனத்தில் நடைபெற்ற மாபெரும் ஊழலுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக ஜேர்மனி அதிகாரிகள் சந்தேகித்தனர்.

இந்நிலையில், கடந்த யூலை 23ம் திகதி பெர்லின் மத்தியில் அமைந்துள்ள Tiergarten என்ற பெரிய காடு பூங்காவில் வைத்து ஆயுதமேந்திய நபர்களால் கடத்தப்பட்டார்

Trinh Xuan Thanh கடத்தப்பட்டது தொடர்பாக வியட்நாம் உளவுத்துறை அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதாக ஜேர்மனி குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக வியட்நாம் தூதருக்கு ஜேர்மனி சம்மன் அனுப்பியுள்ளது.

ஜேர்மனிய மண்ணில் வைத்து வியட்நாமிய குடிமகனின் கடத்தலானது முன்கண்டிராதது. இது ஜேர்மன் சட்டம் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறியது. இதனால் பெருமளவில் உறவுகளை எதிர்மறையாக பாதிக்கும் சாத்தியம் உள்ளது என்று ஜேர்மனி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஜேர்மனியில் உள்ள வியட்நாமிய உளவுத்துறை சேவை பிரதிநிதி 48 மணிநேரத்தில் ஜேர்மனியில் இருந்து வெளியேற வேண்டும் என ஜேர்மனி அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுக்க பெர்லின் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்