அகதிகள் வீட்டில் தீ விபத்து: இருவர் பலி மூவர் படுகாயம்

Report Print Peterson Peterson in ஜேர்மனி
255Shares
255Shares
lankasrimarket.com

ஜேர்மனி நாட்டில் அகதிகள் தங்கியிருந்து வீட்டில் தீ விபத்து நிகழ்ந்ததில் ஆண் மற்றும் பெண் என இருவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Baden-Wurttemberg மாகாணத்தில் உள்ள Markgroningen என்ற நகரில் ஆதரவற்ற நபர்கள் மற்றும் புகலிடத்திற்காக காத்திருக்கும் அகதிகள் சிலர் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் என 150 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

நீண்ட நேரப் போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், கரும்புகையை சுவாசித்த காரணத்தினால் 54 பெண் மற்றும் 56 ஆண் ஆகிய இருவர் பரிதாபமாக பலியாகினர்.

மேலும், தீக்காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு போராடிய மூவரை தீயணைப்பு துறை வீரர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விபத்திற்கு பின்னர் பொலிசார் நடத்திய விசாரணையில் தீ விபத்து சமையலறையில் இருந்து ஏற்பட்டுருக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

தீ விபத்தில் பலியானவர்கள் வீடு இல்லாத ஆதரவற்றவர்களா? அல்லது அகதிகளா? என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.

அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் வீடு எரிந்து போனதால் சுமார் ஒரு லட்சம் யூரோ அளவிற்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்