ஜேர்மனி 350 பில்லியன் யூரோ இழப்பீடு வழங்க வேண்டும்: போலந்து அரசு வலியுறுத்தல்

Report Print Peterson Peterson in ஜேர்மனி
204Shares
204Shares
lankasrimarket.com

இரண்டாம் உலகப்போரில் 60 லட்சம் பேரை கொன்று குவித்த குற்றத்திற்காக ஜேர்மனி 350 பில்லியன் யூரோ இழப்பீடு வழங்க வேண்டும் என போலந்து அரசு வலியுறுத்தியுள்ளது.

போலந்து நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இதுக் குறித்து நாடாளுமன்ற உறுப்பினரான Arkadiusz Mularczyk வெளியிட்ட தகவலில் ‘இரண்டாம் உலகப்போரில் ஜேர்மனியின் நாசிசப் படைகள் போலந்து நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தனர்.

1939 முதல் 1945 வரை நிகழ்ந்த இப்போரில் ஹிட்லரின் ராணுவ வீரர்கள் போலந்து நாட்டை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என இரக்கமின்றி கொன்று குவித்தனர்.

ஒட்டுமொத்தமாக நாசிசப்படைகளால் போலந்து நாட்டை சேர்ந்த 60 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். போலந்து முற்றிலுமாக எரிந்து சாம்பலானது.

இத்தாக்குதலின் விளைவாக கடந்த 50 ஆண்டுகாலமாக போலந்து வறுமையில் தவித்து வருகிறது.

இந்த இழப்பினை ஈடுக்கட்ட ஜேர்மன் அரசு 350 பில்லியன் யூரோவை வழங்க வேண்டும்.

ஜேர்மனியுடன் போர் தொடுக்கும் திட்டம் எங்களிடமில்லை. ஜேர்மனியுடன் மோசமான உறவை வைத்துக்கொள்ளவும் நாங்கள் விரும்பவில்லை.

ஆனால், போலந்துக்கு இழைத்த கொடுமைகளை ஈடுசெய்ய குறிப்பிட்ட தொகையை ஜேர்மனி உடனடியாக வழங்க வேண்டும் என Arkadiusz Mularczyk வலியுறுத்தியுள்ளார்.

போலந்து நாட்டின் கோரிக்கைக்கு ஜேர்மன் அரசு இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்