கர்ப்பிணியை 4 மணிநேரம் காக்க வைத்த மருத்துவமனை: நிகழ்ந்த விபரீத சம்பவம்

Report Print Peterson Peterson in ஜேர்மனி
422Shares
422Shares
lankasrimarket.com

ஜேர்மனி நாட்டில் கர்ப்பிணி பெண் ஒருவரை மருத்துவமனை 4 மணிநேரம் காக்க வைத்ததை தொடர்ந்து அவருக்கு கருக்கலைப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஜேர்மனியில் உள்ள Furstenfeldbruck என்ற நகரில் 37 வயதான பெண் தனது கணவருடன் வசித்து வருகிறார்.

3 மாத கர்ப்பிணியான அவர் சில தினங்களுக்கு முன்னர் கணவருடன் ஷொப்பிங் சென்றுள்ளார்.

அப்போது, எதிர்ப்பாராதவிதமாக திடீரென கர்ப்பிணி பெண்ணிற்கு ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது.

மனைவியின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் அவரை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

ஆனால், துரதிஷ்டவசமாக அப்போது மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் அவரை 4 மணி நேரம் காக்க வைத்துள்ளனர்.

பின்னர், மருத்துவர்கள் வந்து கர்ப்பிணியை சோதனை செய்து பார்த்தபோது அவரது வயிற்றில் இருந்த குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மனைவிக்கு நேர்ந்த நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் மருத்துவமனை நிர்வாகத்தினரை சரமாரியாக தாக்கி பேசியுள்ளார்.

’கர்ப்பிணி பெண் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்னதாகவே அவருக்கு கருக்கலைப்பு ஏற்பட்டு விட்டதாகவும், இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்காலத்தில் தவிர்ப்போம்’ என மருத்துவமனை நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

எனினும், குறிப்பிட்ட அந்த மருத்துவமனையில் தான் தங்களுக்கு முதல் குழந்தை பிறந்ததாகவும், இரண்டாவதாக தனது மனைவிக்கு அதே மருத்துவமனையில் நிகழ்ந்த சம்பவத்தை தனது வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என கணவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்