பெண்களுக்கு ஆதரவாக வரும் புதிய சட்டம்

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனி நாட்டில் உள்ள நிறுவனங்களில் பெண்களை கட்டாயமாக உயர் பதவிகளில் அமர்த்த புதிய சட்டம் இயற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனியில் உள்ள முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் பெண்களை உயர் பதவிகளில் பணியில் அமர்த்தும் வகையில் அரசு ஒதுக்கீடு ஒன்றை அறிமுகப்படுத்தியது.

இதன் அடிப்படையில் குறிப்பிட்ட 100 நிறுவனங்கள் சுமார் 30 சதவிகிதம் பெண்களுக்கு உயர் பதவி வழங்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.

ஆனால், கடந்தாண்டு இறுதியில் எடுக்கப்பட்ட ஆய்வில் குறிப்பிட்ட நிறுவனங்கள் அனைத்தும் சுமார் 6.5 சதவிகித பெண்களுக்கு மட்டுமே உயர் பதவிகளை வழங்கியது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து ஜேர்மனியின் பெண்கள் நலத்துறை அமைச்சரான Katarina Barley என்பவர் நேற்று பத்திரிகையாளர்களுக்கு தகவல் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், முன்னணி நிறுவனங்கள் பெண்களை போதுமான எண்ணிக்கையில் உயர் பதவிகளில் அமர்த்த வேண்டும்.

இதற்கு அனைத்து முன்னணி நிறுவனங்களுக்கும் அடுத்தாண்டு இறுதி வரை காலக்கெடு விதிக்கப்படுகிறது.

இக்காலக்கெடுவிற்கு பின்னர் நிறுவனங்கள் அரசின் உத்தரவை பின்பற்றவில்லை என்றால் இதனை கட்டாயமாக செயல்படுத்த அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரும்’ என Katarina Barley எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆளும் கட்சியின் இந்த அறிவிப்பின் மூலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொது தேர்தலில் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலுக்கு பெண்களின் வாக்குகள் அதிகளவில் கிடைக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்