பிறந்த குழந்தைக்கு ஜேர்மன் சான்சலரின் பெயரை சூட்டிய அகதி தம்பதி

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் புகலிடம் அளித்ததற்காக பெற்றோர் தங்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலின் பெயரை சூட்டி நன்றிக்கடனை செலுத்தியுள்ளனர்.

சிரியாவில் நிகழ்ந்து வரும் உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு Asia Faray மற்றும் Khalid Muhammed என்ற தம்பதி இருவர் ஜேர்மனியில் புகலிடம் கோரி சென்றுள்ளனர்.

இத்தம்பதிக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளன, ஜேர்மனியில் உள்ள Munster நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வரும் இத்தம்பதிக்கு கடந்த ஆகஸ்ட் 16-ம் திகதி பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

ஆதரவு தேடி வந்த தங்களுக்கு அடைக்கலம் வழங்கிய சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலுக்கு நன்றி செலுத்தும் வகையில் அக்குழந்தைக்கு Angela Merkel Muhammed எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

இத்தகவலை மருத்துவமனை நிர்வாகிகள் நேற்று வெளியிட்டுள்ளனர், புகலிடம் கோரி வந்த இரண்டு பெற்றோர்கள் ஏற்கனவே தங்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு ஏஞ்சலா மெர்க்கலின் பெயரை சூட்டியுள்ளனர்.

ஜேர்மனியில் அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில் அகதிகளுக்கு தாராளமாக புகலிடம் வழங்கி வரும் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலுக்கு கூடுதலாக 15 புள்ளிகள் ஆதரவு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்