வடகொரியா விவகாரத்தில் அமெரிக்காவிற்கு ஆதரவு இல்லை: ஜேர்மனி அறிவிப்பு

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

வட கொரியா மீது அமெரிக்கா போர் தொடுத்தால் ஜேர்மன் அரசு தானாக முன்வந்து ஆதரவு அளிக்காது என ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் அறிவித்துள்ளார்.

ஐ.நா சபையின் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத பரிசோதனையை நிகழ்த்தி வருவதால் தென் கொரியாவில் அமெரிக்கா தனது ராணுவ பயிற்சியை தீவிரப்படுத்தி வருகிறது.

கொரிய தீபகற்பத்தில் அசாதாரண சூழல் நிலவி வருவதை தொடர்ந்து வட கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடையே போர் நிகழும் அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில், ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் இன்று தொலைக்காட்சி ஒன்றிற்கு நேரடி பேட்டியளித்துள்ளார்.

அப்போது, வட கொரியா மீது போர் தொடுத்தால் அமெரிக்காவிற்கு ஜேர்மனி ஆதரவு அளிக்குமா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு ஏஞ்சலா மெர்க்கல் பதிலளித்தபோது, ‘நிச்சயமாக இல்லை. வட கொரியா மீது போர் தொடுக்கும் சூழல் ஏற்பட்டால் அமெரிக்காவிற்கு ஜேர்மனி தானாக முன் வந்து ஆதரவு அளிக்காது.

வட கொரியா விவகாரத்தில் ராணுவ நடவடிக்கை நிச்சயமாக தீர்வை ஏற்படுத்தாது.

ராணுவ ரீதியாக ஆதரவு இல்லை என்றாலும், இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஏற்பட அனைத்து விதமான பேச்சுவார்த்தைக்கும் ஜேர்மனி தயார்’ என ஏஞ்சலா மெர்க்கல் பதிலளித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்