அகதிகள் விடயத்தில் ஜேர்மனி எடுத்த முக்கிய முடிவு

Report Print Raju Raju in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

எகிப்திலிருந்து அதிகளவில் அகதிகள் ஜேர்மனிக்குள் வருவதை கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டுடன் ஜேர்மனி ஒப்பந்தம் போட்டுள்ளது.

ஜேர்மனிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பல லட்சம் அகதிகள் அடைக்கலம் தேடி வந்துள்ளார்கள்.

இதனால் வன்முறை சம்பவங்கள் அதிகம் நடப்பதாகவும், அகதிகளை அதிகளவில் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் அனுமதிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்நிலையில், எகிப்திலிருந்து அதிகளவில் ஜேர்மனிக்கு மக்கள் வருவதை தடுக்கும் வகையில் அந்நாட்டுடன் ஜேர்மனி ஒப்பந்தம் போட்டுள்ளது.

இதுகுறித்து செய்தி தொடர்பாளர் Steffen Seibert கூறுகையில், இந்த ஒப்பந்தத்தால் சட்ட விரோதமாக நாட்டுக்குள் மக்கள் வருவது தடுக்கப்படும்.

இதன்மூலம் அகதிகள் சிறந்த வாழ்க்கை நிலையை அடைந்து நல்ல பொருளாதாரத்தை ஈட்ட இது உதவியாக இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் வேலைவாய்ப்பு மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றுக்காக ஒரு மையத்தை எகிப்தில் அமைக்கவுள்ளதாகவும் Steffen தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே துருக்கியிலிருந்து சட்ட விரோதமாக அடைக்கலம் தேடி வரும் மக்களை கட்டுப்படுத்த அந்நாட்டுடன் ஜேர்மனி ஒப்பந்தம் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்