ஜெர்மனியில் பாரிய குண்டு செயலிழப்பு! 65 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

Report Print Vethu Vethu in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரிலிருந்து சுமார் 65 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிராங்பேர்ட் நகரிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் சக்திவாய்ந்த குண்டொன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

advertisement

குறித்த குண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை மிகுந்த பாதுகாப்புக்கு மத்தியில் செயலிழக்க செய்யப்பட்டது. பாதுகாப்பு கருதி மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

வெளியேற்றப்பட்ட மக்கள் பாதுகாப்பாக தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஜெர்மன் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இரண்டாம் உலக யுத்தத்தின் போது பிரித்தானிய படையினரால் வீசப்பட்ட குண்டே இன்று செயலிழக்க செய்யப்பட்டது.

குண்டுசெயலிழக்கப்பட்ட பிரதேசத்தில் 1.5 கிலோமீற்றர் தூரம் ஆபத்தான பகுதியாக கணிப்பிடப்பட்டுள்ளது. இந்த பகுதிக்குட்பட்டட மக்களே பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

எனினும் திட்டமிட்டபடி குண்டு வெற்றிகரமாக செயலிழக்கப்பட்டுள்ளதாக ஜெர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்