இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த நபர்: கடுமையான தண்டனை கிடைக்குமா?

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் இளம்பெண் ஒருவரை கற்பழித்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் மீதான விசாரணை அந்நாட்டு நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த Hussein K(21) என்ற நபர் கடந்த 2015-ம் ஆண்டு புகலிடம் கோரி ஜேர்மனியில் குடியேறியுள்ளார்.

ஃபிரிபோர்க் நகரில் தங்கியிருந்தபோது கடந்த அக்டோபர் மாதம் 19 வயதான இளம்பெண் ஒருவரை இவர் கற்பழித்து கொலை செய்தாக குற்றம் சாட்டப்பட்டது.

பின்னர், டிசம்பர் மாதம் நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்போது அவரிடம் விசாரணை நடத்தியபோது பல ரகசியங்கள் வெளியாகியுள்ளன.

கிரீஸ் நாட்டில் தங்கியிருந்தபோது பெண் ஒருவரை கொலை செய்ய முயன்றதாக அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தபோது அந்நாட்டில் இருந்து தப்பி ஜேர்மனியில் குடியேறியது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், ஃபிரிபோர்க் நகரில் இளம் பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டபோது அவரது உடலில் கைது செய்யப்பட்ட நபரின் டி.என்.ஏ கண்டுபிடிக்கப்பட்டது.

இதுமட்டுமில்லாமல், கொலை நிகழ்ந்த நேரத்தில் அங்கிருந்த கமெராவில் நபரின் உருவம் பதிவாகியிருந்ததால் அவர் தான் கொலையாளி என பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

நபர் மீதான நீதிமன்ற விசாரணை இன்று தொடங்கியுள்ள நிலையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் அவருக்கு இறுதி தீர்ப்பு விதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்