பெர்லின் நீதிமன்றம் அளித்த வினோத உத்தரவு: பொலிசாருக்கு ஏற்பட்டுள்ள நிலை

Report Print Basu in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் பொலிசார் முன்னிலையில் மக்கள் Farting செய்ய நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தலைநகர் பெர்லினில் கிறிஸ்டோப் என்பவரை பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் சோதனை செய்த போது Farting செய்துள்ளார்.

இதனால் கோபமடைந்த பெண் பொலிஸ் அதிகாரி, தன்னை சக ஊழியருக்கு முன்னால் கிறிஸ்டோப் அவமதித்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

இந்த வழக்கில் பெர்லின் நீதிமன்றம் கிறிஸ்டோப்பருக்கு 900 யூரோ அபராதமாக விதித்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில் இந்த வழக்கை பெர்லின் நீதிமன்றம் மறு ஆய்வு செய்தது. இதன் போது, Farting-ஆல் சக ஊழியர்கள் முன் கிறிஸ்டோப் தன்னை அவமதித்ததாக பெண் பொலிஸ் குற்றம்சாட்டியதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அபராதம் விதித்தது மாநிலத்தின் தோல்வி என கிறிஸ்டோப் வழக்கறிஞர் வாதிட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார், மேலும் மக்கள் பொலிசார் முன் Farting செய்ய அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்