சினிமா பாணியில் போதை மருந்து கடத்தல்: நூதனமாக கண்டுபிடித்த பொலிசார்

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

ஜேர்மனி நாட்டில் கொக்கைன் வகை போதை மருந்தை கடத்தி வந்த பயணி ஒருவர் அந்நாட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனியில் உள்ள முனிச் விமான நிலையத்தில் தான் இந்த அதிரடி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

advertisement

தமிழில் வெளியான ’அயன்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் நண்பர் தனது வயிற்றில் சிறிய பைகளில் போதை மருந்தை வைத்து விழுங்கி விட்டு விமானத்தில் பயணம் செய்வார்.

இதே போல், 26 வயதான நபர் ஒருவர் நேற்று முனிச் விமான நிலையத்தில் பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

நபரின் முகபாவனைகள் சந்தேகத்திற்குரியதாக இருந்ததால் அவரை பொலிசார் தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்துள்ளனர்.

ஆனால், அவர் கொண்டு வந்த பெட்டிகளில் போதை மருந்து இல்லை. மேலும், நபரின் ரத்தத்தை சோதனை செய்தபோது அவர் போதை மருந்து சாப்பிடவில்லை என தெரியவந்தது.

எனினும், பொலிசாருக்கு சந்தேகம் தீரவில்லை. நபரை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் லேசர் கருவிகளை கொண்டு அவரது உடலை சோதனை செய்தபோது வயிற்றில் சிறியளவிலான 95 பைகள் இருந்துள்ளன. மிகவும் கவனமாக ஒவ்வொரு பையாக வெளியே கொண்டு வரப்பட்டது.

பின்னர், அதனை சோதனை செய்தபோது அவை அனைத்தும் கொக்கைன் போதை மருந்து எனவும் சுமார் ஒரு கிலோ அளவு இருக்கும் எனவும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

நபரிடம் விசாரணை செய்தபோது அவர் நெதர்லாந்து நாட்டில் இருந்து ஜேர்மனி வழியாக இத்தாலி நாட்டிற்கு பயணமாக இருந்தது தெரியவந்துள்ளது.

இதுக் குறித்து பொலிசார் பேசுகையில், வயிற்றில் மறைக்கப்பட்டிருந்த பைகளில் ஒன்று சேதம் அடைந்த் போதை மருந்து வெளியே வந்திருந்தால் பயணி உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்