ஐ.எஸ் அமைப்பில் சேர முயன்ற ஜேர்மன் குடிமகளுக்கு மரண தண்டனை

Report Print Peterson Peterson in ஜேர்மனி
432Shares
432Shares
lankasrimarket.com

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர முயன்ற ஜேர்மன் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு மரண தண்டனை வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனியில் உள்ள சாக்சோனி மாகாணத்தை சேர்ந்த Linda W(16) என்ற இளம்பெண் சில மாதங்களுக்கு முன்னர் தனது கணவருடன் ஜேர்மனியை விட்டு வெளியேறி ஈராக்கில் நுழைந்துள்ளார்.

பின்னர், கணவருடன் ஐ.எஸ் அமைப்பில் சேர லிண்டா முயற்சி செய்து வந்துள்ளார்.

குர்தி இன போராளிகள் மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் லிண்டாவின் கணவர் பலியாகியுள்ளார்.

இதனை தொடர்ந்து ஈராக்கில் உள்ள மோசூல் நகரில் லிண்டாவை ஈராக் பொலிசார் கைது செய்தனர்.

தற்போது ஈராக் தலைநகரான பாக்தாத்தில் உள்ள சிறைச்சாலையில் லிண்டா அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஈராக் பிரதமரான Haider al-Abadi நேற்று முன் தினம் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது, அப்பாவி மக்களை கொல்லும் தீவிரவாதிகள் அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படும்.

லிண்டாவின் வழக்கிலும் மரண தண்டனை வழங்குவது குறித்து நீதிமன்றம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

லிண்டா கைதானபோது பேசுகையில், ஐ.எஸ் அமைப்புடன் சேர்ந்து போர் புரிய தயார் இல்லை எனவும் தான் ஜேர்மனி நாட்டிற்கு திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜேர்மன் நாட்டு சட்டப்படி எந்த குற்றத்திற்கும் மரண தண்டனை கிடையாது.

லிண்டா மீதான வழக்கு ஜேர்மன் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்