உயிருக்கு போராடிய முதியவரை வேடிக்கை பார்த்த நபர்களுக்கு அபராதம்

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasri.com

ஜேர்மனி நாட்டில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றாமல் கடந்து சென்ற மூவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஜேர்மனியில் உள்ள எஸ்ஸன் நகரில் கடந்தாண்டு 83 வயதான முதியவர் ஒருவர் வங்கிக்கு சென்றுள்ளார்.

பணம் பெறும் பகுதியில் அவர் நின்றுக்கொண்டு இருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

முதியவர் கீழே விழுந்ததை கண்ட மூன்று பேர் அவருக்கு உதவி செய்யாமல் அவரை கடந்து சென்றுள்ளனர்.

சுமார் 7 நிமிடங்களுக்கு பின்னர் வங்கி ஊழியர் ஒருவர் அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவல் பெற்ற மருத்துவ வாகனம் 20 நிமிடங்களுக்கு பின்னர் முதியவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால், துரதிஷ்டவசமாக நினைவு திரும்பாமலேயே ஒரு வாரத்திற்கு பின்னர் முதியவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

உயிருக்கு போராடிய முதியவரை காப்பாற்றாமல் கடந்து சென்ற மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கின் இறுதி வாதம் நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது ‘முதியவரை காப்பாற்றாமல் கடந்து சென்றது மனிதாபிமானமற்ற செயல்.

மூவரின் செயலுக்காக 3,900 யூரோ அபாரதம் விதிப்பதாக’ நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

எனினும், நீதிமன்றத்தில் மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்தபோது ‘மூவரும் சரியான நேரத்தில் உதவி செய்திருந்தாலும் கூட முதியவர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை’ என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்