மீண்டும் சான்சலராக ஏஞ்சலா மெர்க்கல்? கருத்துக்கணிப்பில் தகவல்

Report Print Fathima Fathima in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

ஜேர்மனியில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் ஏஞ்சலா மெர்க்கலே மீண்டும் சான்சலராக தெரிவாவார் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

ஜேர்மனியின் சட்டப்பேரவையின் கீழவையான Bundestag-க்கு எதிர்வரும் 24ம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.

advertisement

இதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தற்போதைய ஆளும் கட்சியே வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது.

எனவே தற்போதைய சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் நான்காவது முறையாக பதவியில் அமர்வார் என தெரியவந்துள்ளது.

இதேவேளை தீவிர வலதுசாரி கொள்கைகளை கொண்ட ஜேர்மனிக்கான மாற்று கட்சி, இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும் எனவும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஏனெனில் இந்த கட்சி அகதிகள் குடியேற்றத்தை கடுமையாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்