ஜேர்மனியில் அகதிக்கு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்: காரணம் என்ன?

Report Print Peterson Peterson in ஜேர்மனி
579Shares
579Shares
lankasrimarket.com

ஐ.நா சபையின் அமைதிக்கான தூதரை கடத்த உதவிய அகதி ஒருவருக்கு ஜேர்மன் நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சிரியாவை சேர்ந்த Suliman al-S(26) என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு கனடா நாட்டை சேர்ந்த அமைதிக்கான தூதரை கடத்துவதற்கு உதவியுள்ளார்.

இக்கடத்தலை தொடர்ந்து 8 மாதங்களுக்கு பின்னர் தூதர் விடுதலை செய்யப்பட்டார்.

சிறை தண்டனையில் இருந்து தப்புவதற்காக அவர் ஜேர்மனியில் குடியேறியுள்ளார். ஆனால், ஜேர்மனியில் அவர் மீதான வழக்கு வெளியானதை தொடர்ந்து 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், ஜேர்மனியில் உள்ள Stuttgart நீதிமன்றத்தில் இவ்வழக்கின் இறுதி விசாரணை நேற்று வந்துள்ளது.

அப்போது, அமைதிக்கான தூதரை கடத்த உதவி குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

மேலும், இக்குற்றத்திற்காக அகதிக்கு 3 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

ஜேர்மன் வரலாற்றில் ஒரு அகதிக்கு சிறை தண்டனை விதித்துள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்