ஜேர்மனியில் வாக்குப்பதிவு தொடங்கியது: ஏஞ்சலா மெர்க்கல் மீண்டும் வெற்றி பெற வாய்ப்பு

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasri.com

ஜேர்மனியில் நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் தற்போதையை சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் நான்காவது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனியில் 19-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்று முன்னர் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது.

ஜேர்மன் நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைகிறது.

நாடு முழுவதும் நடைபெறும் இத்தேர்தலில் தற்போதையை சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் நான்காவது முறையாக போட்டியிடுகிறார்.

ஏஞ்சலா மெர்க்கலுக்கு எதிராக கூட்டணி கட்சி(SPD) தலைவரான Martin Schulz என்பவர் கடும் போட்டியாளராக இத்தேர்தலில் பங்கேற்றுள்ளார்.

மேலும், மூன்றாவது முக்கிய அணியான இடது சாரி கட்சியை சேர்ந்த Alice Weidel and Alexander Gauland என்பவர் தேர்தலில் போட்டியிடுகிறார்.

2005-ம் ஆண்டு முதல் சான்சலராக பதவி வகித்து வரும் ஏஞ்சலா மெர்க்கல் இத்தேர்தலிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

அகதிகளை கட்டுப்பாடில்லாமல் புகலிடத்திற்கு அனுமதிப்பதற்காக சில மாதங்களுக்கு முன்னர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்தது.

எனினும், இந்த விமர்சனங்கள் தேர்தல் முடிவுகளை பாதிக்காது எனவும், இரட்டை இலக்க சதவிதத்தில் ஏஞ்சலா மெர்க்கலுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்