ஜேர்மனியில் வீசிய சேவியர் புயலுக்கு ஏழு பேர் பலி

Report Print Fathima Fathima in ஜேர்மனி
459Shares
459Shares
Seylon Bank Promotion

ஜேர்மனியில் வீசிய சேவியர் புயலுக்கு இதுவரையிலும் ஏழு பேர் பலியாகியுள்ளனர்.

வடக்கு ஜேர்மனியில் வீசிய சேவியர் புயலால் ஹம்பெர்க் நகரில் புயலின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது.

இப்புயலுக்கு இதுவரையில் ஏழு பேர் பலியாகியுள்ளனர், பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளதால் ரயில், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக Hanover- Berlin, Hamburg- Berlin, Hamburg- Hanover மற்றும் Hamburg- Kiel இடையிலான ரயில் வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

வனவிலங்கு சரணாலயங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளதால் மூடப்பட்டுள்ளன.

எனினும் மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருவதால் மக்கள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்