ஸ்பெய்னில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தினார் ஜேர்மன் அதிபர்

Report Print Thayalan Thayalan in ஜேர்மனி
ஸ்பெய்னில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தினார் ஜேர்மன் அதிபர்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

ஸ்பெய்னில் தேசிய ஒற்றுமை பேணப்பட வேண்டும் என, ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

தற்போது கதலோனியாவில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமை தொடர்பில் ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ரஜோயுடன் ஜேர்மன் அதிபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடியபோதே, இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த ஜேர்மன் அதிபர், ஸ்பெய்னில் தேசிய ஒற்றுமை பேணப்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும் இதற்கு தான் ஆதரவு அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், சுமூகமான தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக சமாதானக் கலந்துரையாடல்களுக்கும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, கதலோனியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத் தலைவர் ஜுன் க்குளோட் ஜங்கருடனும் ஜேர்மன் அதிபர் கலந்துரையாடியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்