ஜேர்மனியில் உளவு பார்த்த வெளிநாட்டு நபர்: நீதிமன்றம் அளித்த தண்டனை

Report Print Raju Raju in ஜேர்மனி
137Shares
137Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் உள்ள முக்கிய அரசியல்வாதியை உளவு பார்த்த துருக்கி குடிமகனுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதுடன், இரண்டாண்டுகள் அவரின் நன்னடத்தையை சோதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

துருக்கியை சேர்ந்த Mehmet Fatih S (32) என்பவர் அந்நாட்டின் புலனாய்வு துறை நிறுவனமான MIT-ன் ஆணைப்படி ஜேர்மனிக்கு வந்துள்ளார்.

ஜேர்மனியில் உள்ள குர்து மக்களின் தலைவராக உள்ள அரசியல்வாதி ஒருவரை Fatih தொடர்ந்து உளவு பார்த்துள்ளார்.

இது குறித்து அறிந்த ஜேர்மனி பொலிசார் Fatih-ஐ கடந்த டிசம்பர் மாதம் ஹாம்பர்க் நகரில் கைது செய்தனர்.

Fatih மீதான வழக்கு விசாரணை ஹாம்பர்க் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில், இரண்டாண்டுகள் Fatih-ன் நன்னடத்தையை சோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 20,950 யூரோ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் ஜேர்மன் குடிவரவு அதிகாரிகள் Fatih நாட்டை விட்டு வெளியேற வேண்டுமா என்பதை தீர்மானிக்கவுள்ளார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்