பாலியல் தொழில், போதைப் பொருள் விற்பனை: சட்டவிரோத பகுதியாக மாறும் பெர்லின் பூங்கா

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
0Shares
0Shares
Seylon Bank Promotion
advertisement

ஜேர்மனியின் பெரிலின் நகரில் உள்ள Tiergarten என்ற பூங்கா மக்களால் அதிகம் விரும்பப்படும் மிகவும் பிரபலமான பூங்கா ஆகும்.

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் செல்லும் இந்த பூங்காவில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற கொலையால், அந்த பூங்கா பாதுகாப்பற்ற இடமாக கருதப்பட்டு உள்ளூர் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

advertisement

கடந்த செப்டம்பர் 8 ஆம் திகதி 40 வயதுடைய சூசன்னே என்ற பெண் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டார்.

மேலும் சூசன்னேவிடம் இருந்த கைப்பேசி மற்றும் சில முக்கிய பொருட்கள் காணாமல் போனதால், இதில் ஏதேனும் பின்னணி இருக்கும் என பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

இதில், 18 வயதுடைய ரஷ்ய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மத்திய பெர்லின் மேயர் Mitte கூறியதாவது, Tiergarten பூங்கா சட்டவிரோதமான பகுதியாக மாறியுள்ளது.

அந்த பூங்காவில் வீடற்றவர்கள் வசிப்பதோடு மட்டுமல்லாமல், போதைப்பொருள், பாலியல் தொழில் போன்றவை நடைபெறுகின்றன.

அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு இந்த பூங்கா மிகவும் வசதியாக இருக்கிறது என கூறியுள்ளார்.

பெர்லின் நகர மேயர் கூறியதாவது, இந்த சம்பவத்தினை தொடர்ந்து அரசாங்கத்தால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, இனி அந்த பூங்காவில் எவ்வித பிரச்சனைகள் நடந்தாலும், நகர செனட் விரைந்து தனது பணிகளை செய்யும் என்றும் பூங்காவிற்கு வரும் மக்கள் அந்த இடத்தை விட்டு செல்கையில் அமைதியாக செல்வதையே நாங்கள் விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்