ஜேர்மனியில் புகலிடம் கோரும் அகதிகளின் எண்ணிக்கை சரிவு

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

ஜேர்மனியில் புகலிடம் கோரும் அகதிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனி நாட்டிற்கு மூன்றாவது முறையாக சான்சலராக தெரிவு செய்யப்பட்ட ஏஞ்சலா மெர்க்கல் தனது கூட்டணி கட்சிகளுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளார்.

advertisement

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், புகலிடம் கோரும் அகதிகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் அகதிகளுக்கு மட்டுமே புகலிடம் அளிக்க ஏஞ்சலா மெர்க்கல் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.

இதனை தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் புகலிடம் கோரியவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை ஜேர்மனியில் புகலிடம் கோரி 1,39,635 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

ஆனால், செப்டம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 10 சதவிகிதம் குறைந்துள்ளது.

ஜேர்மனியில் கடந்த 2015-ம் ஆண்டு 8,90,000 பேர், 2016-ம் ஆண்டு 2,80,000 பேர் புகலிடம் கோரி சென்றுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்தவர்கள் என ஜேர்மன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்